எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்? – மாணிக்கம் தாகூர் கேள்வி?

எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்? என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியளிக்கிறது!

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பு உறுதி செய்யப்படாத சூழல் உருவாகியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. இது ஒரு சாதாரண விபத்து குறித்த கேள்வி மட்டுமல்ல; நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்குப் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.

என்ன நடந்தது? பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததா? எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்?

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பில் அலட்சியத்திற்கு இடமில்லை!

அன்பு தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு என்பது ஒரு தனிநபரின் பாதுகாப்பு மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும் அரசியலமைப்புச் பொறுப்பையும் காக்கும் கடமையாகும்.

அமித் ஷா அவர்களே, மௌனம் வேண்டாம் — பதில் சொல்லுங்கள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.