புதிய கல்விக் கொள்கை குறித்த திமுக அரசின் நிலைபாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.எல்லாவற்றையும் போல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா?” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லாவற்றையும் போல இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இப்பிரச்சினையில், நீட் தேர்வு விவகாரத்தைப் போல திமுக அரசு நாடகமாடக்கூடாது. புதிய கல்விக் கொள்கை குறித்த தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம் என்று கூறி வந்த தி.மு.க. அரசு, தற்போது அந்த கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தைப் போல தி.மு.க. அரசு நாடகமாடக் கூடாது எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.







