முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவில் டிடிவி தினகரன்?

டிடிவி தினகரன் தனது தவறை ஒப்புக்கொண்டு அதிமுகவில் இணைவது தொடர்பாக மன்னிப்புக் கடிதம் வழங்கினால் அந்தக் கடிதத்தை கட்சித் தலைமை பரிசீலனை செய்யும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக-வில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது எனக் கூறினார். அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் எனவும் அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காக துவங்கப்பட்ட கட்சி அமமுக என்றும் அப்படிப்பட்ட ஓரு கட்சியுடன் அதிமுக இணைவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கேபி முனுசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இடைவிடாது மழை: வெள்ளத்தில் மிதக்கும் நமது அண்டை நாடு!

Web Editor

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற இந்திய ஜோடி

Web Editor

இந்தி விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறது தமிழக பாஜக – கே.எஸ்.அழகிரி

EZHILARASAN D

Leave a Reply