விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 – 23ம் ஆண்டு வேளாண்மை…

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 – 23ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு 5 கோடி ரூபாய் செலவில் தார்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

36 கோடி ரூபாய் செலவில் ஆறு ஒழங்குமுறை விற்பனை கூடங்களுக்கு, கிடங்குகள் உலர்தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் என அறிவித்த எதையும் திமுக அரசு செய்யவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று கூறிய வாக்குறுதியை திமுக நிறைவேற்றியதா என்று கேள்வி எழுப்பினார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசு, தாமதிக்காமல் இனியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என தாம் நம்புவதாக
அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.