ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு!

ஜப்பானில் நிலநடுக்கத்தால் பெரியதாக சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பெரியதாக சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இதன் மையப்புள்ளியின் ஆழம் 50 கிலோமீட்டராக இருந்தது என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் நிலநடுக்கத்திற்குப் பின் தோஹோகு ஷின்கான்சென் அதிவேக ரயில் சேவைகள் உட்பட சில ரயில்களை நிறுத்தியுள்ளதாக கிழக்கு ஜப்பான் ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.