தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே பி அன்பழகன், தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றிவேல், அரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத் குமார் ஆகியோரை ஆதரித்து அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசியவர், “2021 திமுக ஆட்சியில் தருமபுரி, கோவை பகுதி பழிவாங்கப்பட்டது. கோவிட் மருந்து கொடுக்காமல், மக்கள் வீதிக்கு வந்து போராடினர். அதன்பிறகு தான் மருந்து கொடுத்து, முதல்வர் கோவை வந்தார். ஏற்கனவே எம்பியாக இருந்தவர், மத்திய அரசு திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டுவதால், எங்காவது பூஜை நடந்தால் போய் விடுவார்.
131 திருத்த சட்டத்தை மோடி கொண்டு வந்தார். ஆனால் பெண்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு காலம் உழைக்க வேண்டும். பெண் வேட்பாளர் பல சூழலை உடைத்து வந்தவர்கள். அதனால் 33 சதவீத இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயரும். இதில் எங்கும் தொகுதி குறையாது. தமிழ்நாட்டிற்கு 59 ஆக உயரும், தென்மாநிலத்தில் 129 ஆக எண்ணிக்கை உயரும். ஆனால் இந்த மசோதாவை காங்கிரஸ், திமுகவினர் தோற்கடித்துள்ளனர். இதை மோடி கொண்டு வருவார். இதற்கு எதிராக வாக்களித்த திமுக கூட்டணிக்கு பெண்கள் யாரும் வாக்களிக்க கூடாது.
கடந்த 1973 மறு சீரமைப்பு 525 லிருந்து 545 எம்.பி கொடுக்கும் போது கருணாநிதி வேண்டாம் என சொன்னார். முன்பு 39, பின்பும் 39 எம்பிக்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது. அதே தவறை இன்று ஸ்டாலினும் செய்கிறார். எல்லா இடத்திலும் நதிநீர் பிரச்சினை இருக்கு. ஆனால் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்து, 5 முறை கேரளா போனார். ஆனால் முல்லைப், பெரியார் அணை குறித்து பேசவில்லை. விவசாயத்தையும், விவசாயிகள் பற்றிய எந்த கவலையும் தெரியாது. கடந்த ஆண்டில் நீக்கப்பட்ட விவசாயிகள் பெயரை இணைக்க சொல்லி மத்திய அரசு கடிதம் கொடுத்தும் கேட்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் 6000 கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம். அதைப் பார்த்து பொறுக்க முடியாமல், பிரேமலதா பேசிவிட்டார். இன்று மோடியுமா, எடப்பாடியும் கோவையில் ஒன்றாக பிரசாரம் செய்கிறார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தனியாக, ராகுல் தனியாக பிரச்சாரம் செய்கிறார். இது பொருந்தாத கூட்டணி. இது எந்த நேரத்திலும் உடையும் கூட்டணியாக உள்ளது. நம்ம கூட்டணி பற்றி பொய்யாக பேசுவார்கள். பாஜக வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்துவதாக சொல்வார்கள். கடந்த 12 ஆண்டுகளாக பேசுகிறார்கள். ஆனால்100 நாளில் இருந்து 125 நாளாக உயர்த்தியுள்ளார்கள். நூறுநாள் வேலை திட்டத்திற்கு 12 இலட்சம் கோடி நிதி வழங்கியுள்ளார்கள். மத்திய அரசு நிதி மட்டும் வந்தது. மாநில அரசு நிதி கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.







