இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. லக்னோவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 154 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான இஷான் கிஷன் 125 ரன்கள் விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமான அளவு அதிகரித்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் நங்கேயாலியா கரோடே 4 விக்கெடுகளையும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்ய உள்ளது.




