ராம் சரண் – புஜ்ஜி பாபு கூட்டணியில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பெத்தி’. இப்படத்தில் ஜான்வி கப்பூர், சிவாராஜ்குமார், ஜகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இருந்த போதிலும் பெத்தி திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் பெத்தி திரைப்படம் உலகளவில் 400 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.




