“இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க பாஜக முயற்சிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஓன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற முழக்கங்களால் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

மாநில உரிமைகளைப் பறித்து சர்வாதிகார ஆட்சியை நிறுவ வேண்டும் என பாஜக இலக்கு வைத்துள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கும் பாஜகவின் பாசிசத்திற்கும் இடையிலான போராட்டத்தில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.