கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். இதில் கரூர், திருப்பூர், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சார்ந்த 16 நிறுவனங்கள் பங்கேற்றது.
மேலும், தங்கள் நிறுவனத்திற்கு தகுதியான நபர்களை பணிக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அப்போது பல்வேறு நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாற்றுத் திறனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார்.
——-கு. பாலமுருகன்







