ஆரணி அருகே திரௌபதி அம்மன் அலய அக்னி வசந்த விழா!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மகாபாரத கதை நாடக கலைஞர்களால் வெகு சிறப்பாக நடித்து நாடகமாக அரங்கேற்றப்பட்டது. புராண இதிகாசமான…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மகாபாரத கதை நாடக கலைஞர்களால் வெகு சிறப்பாக நடித்து நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

புராண இதிகாசமான மகாபாரதத்தில் வரும் திரௌபதி தாயாருக்கு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 16ம் தேதி அலகு நிற்கு வைத்து தொடங்கியது.

அதுமுதல் தினமும் ஆன்மிக பெரியவர்களின் சொற்பொழிவு தினமும் நடைபெற்று வந்தது. மேலும் கடந்த 25ம் தேதி முதல் நாடக கலைஞர்களால் மகாபாரதம் நாடகம் தினமும் அரங்கேற்றபட்டு வருகிறது.

விழாவின் இறுதி நாளாக மகாபாரத இறுதி போரானின் நிகழ்வான துரியோதனை வதம் செய்து துரியோதனின் உதிரத்தை பாஞ்சாலியின் கூந்தலில் தடவி பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்றிய காட்சி மிக தத்ரூபமாக நாடக கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டது.

மேலும் இறந்த துரியோதனின் உடலை பார்த்து அவனது மனைவி காந்தாரி ஒப்பாரி வைத்து அழும் காட்சியும் மிக இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தினர். இந்த நாடகத்தை கூடியிருந்த பார்வையாளர்கள் மெய் மறந்து ரசித்து பார்த்தனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.