ஆன்லைன் விளையாட்டு: மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பேரழிவு தரும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாப் பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளி யிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…

பேரழிவு தரும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாப் பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளி யிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆன்லைன் கல்வி யும், ஆன்லைன் விளையாட்டுகளும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்யவோ, செயலிகளை விலைக்கு வாங்க வோ அனுமதிக்கக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஓடிபி-ஐ பிள்ளைகள் பயன்படுத்தவோ அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் அடல்ட் செயலி மற்றும் வெப் சீரிஸ்களை பயன்படுத்துகிறார்களா? என் பதைக் கண்காணித்து அதை தடுத்து உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும் என தெரிவித் துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடத் தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுற்ற றிக்கையில் பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.