முக்கியச் செய்திகள் சினிமா

இந்த தேகம் மறைந்தாலும்.. எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன் னிட்டு சமூக வலைதளத்தில்  திரையுலகினரும் ரசிகர்களும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

பாடும் நிலா பாலு எனப்படும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். நடிகராகவும் தன் திறமையை காட்டிய எஸ்.பி.பி, கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து விரைவில் குணமாகி மீண்டும் வருவேன் என்று கூறிவிட்டு தனியார் மருத் துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் இதே நாளில், சிகிச்சை பலன்றி அவர் காலமானார்.

அவர் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும் அவர் பாடல்கள் அவரை இன்னும் உயிர்ப் புடன் வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவர் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவருடைய பாடல்கள் மற்றும் பேட்டிகளை பகிர்ந்து வருகின்றன ர். இதனால் #spbalasubrahmanyam என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை: பிரதமர் மோடி

Nandhakumar

அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசு

Halley karthi

அரசுக்கு தேவையான ஆலோசனையை அதிமுக வழங்கும்: விஜயபாஸ்கர்!

Halley karthi