தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ள விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், முதல மைச்சராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே 5 கோப்புகளில் கையெழுத்திட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2 கோடியே 9 லட்சம் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணத்தொகை, ஆவின் பால் லிட்டருக்கு 3 குறைப்பு, மகளிருக்கு அரசு நகரப்பேருந்து களில் இலவச பயணம், மக்கள் மனுக்களுக்கு தீர்வு காண உங்கள் தொகுதியில் முதல மைச்சர் என்ற புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அரசே ஏற்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1441578730011316235?s=21
அதே போல், முதன்முறையாக சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2 ஆயிரத்து 756 கோடி தள்ளுபடி , தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்பட்டது, நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.







