தமிழ்நாட்டிலும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் அலை, இரண்டாம் அலை என ஒரு வருடத்திற்கு மேலாக இந்தியாவை மிரட்டி வருகிறது. 2ம்…

சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் அலை, இரண்டாம் அலை என ஒரு வருடத்திற்கு மேலாக இந்தியாவை மிரட்டி வருகிறது. 2ம் அலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் 3ம் அலை வரலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதனை எதிர்கொள்ள தயாராகி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை உள்ளிட்ட பாதிப்புகளும் மிரட்டத் தொடங்கியுள்ளன. தற்போது உருமாறிய கொரோனாவான டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் மகராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவ 22 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும், அவர் யார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.