வந்தாச்சு அப்டேட்.. தனுஷ்- செல்வராகவன் இணையும் பட ஷூட்டிங் எப்போது?

தனுஷ் – செல்வராகவன் இணையும் ’நானே வருவேன்’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க இருக்கிறது என்கிற அப்டேட் வெளியாகி இருக்கிறது. தனுஷ் – செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா இணையும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும்…

தனுஷ் – செல்வராகவன் இணையும் ’நானே வருவேன்’ படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க இருக்கிறது என்கிற அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தனுஷ் – செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா இணையும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் எதிர்பார்ப்பு உண்டு. அவர்களை இணந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் செல்வராகன், தன் தம்பி தனுஷுடன் கடைசியாக ’மயக்கம் என்ன’ படத்தில் இணைந்திருந்தார். இந்தப் படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இதையடுத்து தனுஷை மீண்டும் இயக்க இருப்பதாக செல்வராகவன் கூறி வந்தார்.

இந்நிலையில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்துக் கு’நானே வருவேன்’என்று பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் ஹாலிவுட் படமான ’தி கிரே மேன்’ ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கிருந்து திரும்பியதும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்பட்டு வந்தது. இதை செல்வராகவனும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ‘நானே வருவேன்’ படம் பற்றி தயாரிப்பாளார் கலைப்புலி எஸ்.தாணு, முக்கிய அறிவிப்பு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி, இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த டீமுடன் இணைந்து படம் தயாரிப்பதை பெருமையாக நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவனும் இதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்த அசுரன், கர்ணன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.