தீபாவளி பண்டிகை: #SpecialTrains அறிவிப்பு!

தீபாவளிப் பண்டிகையையொட்டி நெரிசலைக் குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சிறப்பிக்கப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி முன்னிலை வகித்து வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள்…

Diwali festival: #SpecialTrain runs between Chennai – Bengaluru!

தீபாவளிப் பண்டிகையையொட்டி நெரிசலைக் குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிறப்பிக்கப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி முன்னிலை வகித்து வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் விடப்படுவதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தொடங்குவார்கள். இதற்காக பண்டிகை தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஹுப்பள்ளியில் இருந்து மங்களூருக்கு நவ. 2-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில் மங்களூரு – ஹுப்பள்ளி இடையே நவ. 3-ல் சிறப்பு இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ஆர். பெங்களூரு – சென்னை எழும்பூர் இடையே அக். 30, நவ. 3-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் – கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே அக். 30, நவ. 3-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

யஷ்வந்த்பூர் – மங்களூரு இடையே அக். 30, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.