முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசியலில் வாரிசுகள் வருவதில் தவறில்லை -ஆர்.எஸ். பாரதி

அரசியலில் வாரிசுகள் வருவதில் தவறில்லைஎன திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் இறையன்பன் குத்தூஸ்
இசை பயணத்தின் மணிவிழா மற்றும் வி.எஸ்.என் காதர் அலி இயற்றிய கழகப் பாடல்
வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான்,
திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக செய்தித்தொடர்பு தலைவர்
டி.கே.எஸ்.இளங்கோவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர்
மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தை விளக்கும் விதமாக
வி.எஸ்.என் காதர் அலி இயற்றிய உதயநிதி எங்கள் உதயநிதி என்ற பாடல்
வெளியிடப்பட்டது.


பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, வாரிசு வாரிசாக அரசியலில் இருப்பவர்கள் நாங்கள் யார் எப்படி பேசினாலும் கவலை
இல்லை. கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல அரசியலிலும் வாரிசுகள் வருவதில் தவறில்லை.  உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளார் என பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்து காட்டிய
பெருமை உதயநிதியையே சேரும். எனவே நாளை அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முல்லை பெரியாறு அணை விவகாரம்; கேரளா அரசியல் செய்ய வேண்டாம்

G SaravanaKumar

சபாநாயகர் தேர்தல்: அப்பாவு வேட்புமனு தாக்கல்!

நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?