முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து; 6வது முறையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா

உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக அர்ஜெண்டினா முன்னேறியது.

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரையிறுதி போட்டி நேற்று லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் குரோஷியா மோதியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில் தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார். அவரை தொடர்ந்து ஜூலியன் மேலும் 2 கோல்கள் அடித்தார்.இதனையடுத்து 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல்கள் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றிப் பெற்று, 6வது முறையாக உலக கோப்பை இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பிரான்ஸ், மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்பு; அரசின் புதிய திட்டம்

G SaravanaKumar

தமிழ்நாட்டில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

EZHILARASAN D

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை – செந்தில்பாலாஜி

Arivazhagan Chinnasamy