நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ எப்போது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்பட வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் பெரும் வசூலைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில்,…

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்பட வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் பெரும் வசூலைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் டான் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும், காளி வெங்கட்,‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிக்கிறார்களும் இப்படத்தில் நடித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில், கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. டான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: கடத்தப்பட்ட குழந்தையை ஒரே நாளில் மீட்டு, அசத்திய போலீஸ்

அதனை உறுதி செய்யும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியீட்டுத் தேதியுடன் ஓடும் வீடியோவை பதிவிடுள்ளார். அதில், அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.