குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்க தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்கும்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு காலை 6-மணிக்கு கோவளம் கடற்கரையில் இருந்து ஆய்வு பணியை…

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்கும்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு காலை 6-மணிக்கு கோவளம் கடற்கரையில் இருந்து ஆய்வு பணியை தொடங்கினார். செம்பாக்கம் இருளர் குடியிருப்பு, தண்டரையில் கட்டப்பட்டு வரும் அரசு கட்டடப்பணிகளைப் பார்வையிட்டார். செங்கல்பட்டு ஜேசிகே நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பார்வையிட்டார்.

அண்மைச் செய்தி: “என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை” – அன்புமணி ராமதாஸ் எம்பி

இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆங்காங்கே குப்பைகள் குவிக்கப்பட்டிருந்ததை பார்த்த அவர், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் அறிவுறுத்தினார். புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பார்வையிட்ட பின்னர் பழவேலி பகுதியில் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.