மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்படுவது தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவரப்பூரில் பாமக சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்களிடம் கருத்துகளைக் கேட்ட போது, ஒரு பிடி மண்ணையும் தரமுடியாது என கூறியதாக தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: “நீட் – குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: திருமாவளவன் எம்பி”
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 8 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் 800 அடிக்கு சென்றதற்கு காரணம் என்எல்சி நிறுவனம் தான் என்று குற்றம்சாட்டினார். நில எடுப்பு விவகாரம் குறித்து என்எல்சியிடம் ஐவர் குழு பேச்சு வார்த்தை நடத்தும் என கூறினார்.
மேலும், நில எடுப்பு விவகாரத்தை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள பாமக தயாராக இருப்பதாக கூறிய அன்புமணி ராமதாஸ், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








