“கடல் கடந்து சென்றேன், கைநிறைய ஒப்பந்தம் பெற்றேன்” – முதலமைச்சர்

கடல் கடந்து சென்றேன், கைநிறைய ஒப்பந்தம் பெற்றேன் என்று துபாய் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட…

கடல் கடந்து சென்றேன், கைநிறைய ஒப்பந்தம் பெற்றேன் என்று துபாய் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதையும், துபாயின் உலகின் மிக உயர்ந்த புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் தமிழ் வண்ண வண்ண விளக்குகளில் ஒளிர்ந்ததையும் மு.க.ஸ்டாலின் கடித்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைத்தாலும், பொதுமக்களும், மாற்றுக் கட்சியினரும் மனதளவில் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல, இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், தமிழ்நாடும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவுக்குச் சென்றதை நினைவு கூர்ந்துள்ள முதலமைச்சர், ‘மூப்பில்லாத் தமிழே.. தாயே’ என அவர் உருவாக்கியிருந்த ஆல்பம் பற்றியும் கடித்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மார்ச் 26-ஆம் தேதி முதலீட்டாளர் மாநாட்டில் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய வகையில் செயல்படுவதாக கூறியதையும் அவர் கடிதத்தில் கூறியுள்ள அவர், துபாயில் பன்னாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றபோது கோட் – சூட் உடை அணிந்திருந்தாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்ச் சொந்தங்களை சந்திக்கும் நிகழ்வின் போது வேட்டி – சட்டை அணிந்து சென்றதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்காது’ – இந்திய வங்கி ஊழியளர் சம்மேளனம்

மேலும், வெள்ளை சட்டையும், கரை வேட்டியும்தான் எப்போதும் கெத்து என்றும் எந்நாளும் கௌரவம் என்றும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ள அவர், கடல் கடந்து சென்று, கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்று திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழ்ப் பண்பாட்டின் வழியே பயணித்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.