கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனைச் சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்குத் தினமும் 5௦௦-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையில், மருத்துவ அலுவலராகத் தினகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்கு பணியாற்றி வரும் செவிலியர்கள் உடன் முறையான விடுப்பு எடுக்காமல் சுற்றுலா சென்றுள்ள அவர், மருத்துவம் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் மகனைத் தான் பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை – சாமியார் கைது’
மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற நோயாளிகள் விசாரித்த போது, அஷ்வின் தான் பவானி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். ஆனால், அவர் பொய் சொல்வதாக உணர்ந்த பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்குப் பரபரப்பு நிலவி வருகிறது. மருத்துவத்துறை என்பது கடவுளுக்குச் சமம் என்று கூறப்படும் நிலையில், இதுபோன்று மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.