முக்கியச் செய்திகள் இந்தியா

ஏர் இந்தியாவின் மெகா பிளான் – 300 ஜெட் விமானங்களை வாங்க முடிவு

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறியவகை ஜெட் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வர்த்தகப் பயன்பாட்டுக்காக ஒரு நிறுவனம் 300 விமானங்களை வாங்க இருப்பது இதுவே முதல்முறை என்றும் அந்த வகையில் இது ஏர் இந்தியாவின் மிகப் பெரிய திட்டம் என்றும் வர்ணிக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் 300 விமானங்களுக்கான மொத்த மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையின் முடிவில், ஏர் இந்தியா முடிவை அறிவிக்கும் என்றும், அது ஒரு நிறுவனமாகவோ அல்லது இரண்டு நிறுவனங்களாகவோ இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

300 விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் கிடைப்பதற்கு 10 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டினப் பிரவேச விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் – அமைச்சர் சேகர்பாபு

Arivazhagan CM

ஆர்.ஏ.புரம் விவகாரம்- நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Saravana Kumar

“கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! ” ராதாகிருஷ்ணன்

Halley Karthik