கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம்…

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பதாகைகளை ஏந்திய படி, கர்நாடகா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது எனவும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.