கிரிக்கெட் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவர்கள் என நினைக்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த முடியும். கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான திட்டமிடல் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்த ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துக்காகவும், பெருமைக்காகவும் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள். ஐபிஎல் போட்டியை விட சர்வதேச போட்டிகளில் தான் மதிப்பு அதிகம்.
ஐபிஎல் போட்டியால் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படாது. அதற்கு ஏற்ப போட்டி அட்டவணை உருவாக்கப்படுகிறது என்றார் கங்குலி.
-மணிகண்டன்








