உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷாவுக்கு மாரடைப்பு!

ஹிமாச்சல பிரதேசத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷாவுக்கு வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது.  64 வயதான நீதிபதி எம்.ஆர்.ஷா குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கும் முன் பாட்னா…

ஹிமாச்சல பிரதேசத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷாவுக்கு வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. 

64 வயதான நீதிபதி எம்.ஆர்.ஷா குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கும் முன் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷாவுக்கு வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் ஹிமாச்சலத்தில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

https://twitter.com/gauravbh/status/1537376164301266944

இதுகுறித்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளருமான கௌரவ் பாட்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஷாவுக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

நீதிபதி எம்.ஆர்.ஷா, பிரதமர் மோடியை ‘பிரபலமான, அன்பான, துடிப்பான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.