முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்துவதில்லை-தொல்.திருமாவளவன்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்துவதில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
தொல். திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்கள் குறித்த
கேள்வி உள்பட செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி:

இலங்கை கடற்படையால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு
இருக்கிறார்கள். மத்திய அரசு தமிழக மீனவர்களின் மேல் அக்கறை செலுத்துவதே
இல்லை. எக்கேடு கேட்டாலும் நமக்கு கவலை இல்லை என்கிற அலட்சியப் போக்கில்
செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உடனடியாக இந்திய அரசு இதில் தலையிட வேண்டும். கைது செய்யப்பட்ட 8
மீனவர்களையும் விடுவிப்பதற்கும் அவருடைய உடமைகளை திரும்ப பெறுவதற்கும் ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழக முதல்வரும் இது
குறித்து இந்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்
விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கள்ளக்குறிச்சி அருகே ஊடகவியலாளர்கள் மீது நடந்திருக்கிற இந்த தாக்குதல் குறிப்பாக நக்கீரன் முதன்மை செய்தியாளர், மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் மீது அவர் வந்த வாகனத்தின் மீது மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்திருக்கிறது. அதேபோல கேமரா மேன் அஜித் என்பவர் தாக்கப்பட்டு அவருடைய பல் உடைந்து இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தூண்டியவர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பறிப்பது மட்டுமல்ல இது மிக மோசமான ஒரு
முன்மாதிரியாக அமைந்து விடும். ஊடகவியலாளர்கள் எது குறித்தும் எழுத முடியாது,
பேச முடியாது என்கிற ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அநாகரிகமான செயலாக
உள்ளது.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

நீட் தேர்வில் தாழ்த்தப்ட்ட பிற்படுதப்பட்ட மக்களுக்கு பாதிப்பிலை என மத்திய
இணைஅமைச்சர் ராம்தாஸ் அதாவாலே கூறியிருக்கிறார். அதாவாலே ஒரு தலித் தலைவர் போல் இல்லாமல் பாஜக அமைச்சராக பேசியுள்ளார்.

நீட்தேர்வின் பதிப்பை தமிழகத்திலிருந்து பார்க்க வேண்டும். பெரியார், அம்பேத்கர்
பார்வையில் இருந்து பார்க்க வேண்டும். வட இந்திய மாநிலங்கள் இப்படித்தான் அதை
அணுகுவதாக நான் பார்க்கிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீட் விலக்கு
சட்ட மசோதா ஒருமுறைக்கு இருமுறை நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது மசோதாவும் கிடப்பில்
போடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது மசோதா கிடப்பில் போடப்பட்டிருக்கிறது இந்திய அரசு மாநில
அரசின் அதிகாரத்தை எந்த அளவுக்கு உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு
சான்று. உடனடியாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று
விடுதலை சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுகிறேன்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல; அகில
இந்திய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனாத சக்திகளுக்கு
எதிராக யார் தலைமையில் அணி திரள்வது என்கிற ஒரு கேள்வி இருந்தது. ஒரு வெற்றிடம்
இருந்தது. அதை நிரப்பக் கூடிய வகையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை
பயணம் அமையும் என்று நான் நம்புகிறேன்.

அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் காங்கிரஸ் மீதும் ராகுல் மீதும் நம்பிக்கையோடு அணி திரளுவார்கள். சனாதன சக்திகளை விரட்டியடிப்பார்கள். அதற்கு இந்த பயணம் வழிவகுக்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

பாஞ்சான்குளம் பகுதியில் நடைபெற்ற ஊர் கட்டுபாடுகளில் தமிழக அரசு விரைந்து
உடனடியாக பெட்டிக் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
அதை வரவேற்கிறோம், ஆனால் ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரால் சமூக புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். இது சாதாரணமான ஒன்று அல்ல, ஒரு தனி நபர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு ஒரு சமூகத்தையே ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பது வேறு.

அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு நபரை தாக்குவது அல்லது ஒரு நபருக்கு எதிரான வன்கொடுமை ஈடுபடுவது என்பது வேறு. ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தையே ஒரு ஊரையே ஒதுக்கி வைப்பது கடைகளின் பொருள் கொடுப்பதில்லை, வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை, உறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை போன்ற ஒரு ஒடுக்குமுறையை திணிப்பது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னால் இருந்த மிக மோசமான பழமை வாத போக்கு, சாதிய வன்மத்தின் உச்சம் இதை
அரசு அலட்சியமாக பார்க்கக் கூடாது.

இதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதிலே குறிப்பாக இந்த மகேஸ்வரன் மீது போடப்பட்டிருக்கிற வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவு போடப்படவில்லை.

இந்து மனுதர்மத்தில் கூறியதை நானும் சுட்டிக் காட்டினேன். நான் ஒட்டுமொத்தமாக
இந்து சமூகத்தைச் சார்ந்த பெண்களை எல்லாம் இழிவுபடுத்தியதாக இந்த சனாதன
கும்பல் மிகப் பெரிய சமூகப் பதற்றத்தை உருவாக்கினார்கள். இந்தியா முழுவதும் அதை
கொண்டு போய் சேர்த்தார்கள். அதேபோல நானும் அவரும் கடந்து கொண்ட நிகழ்ச்சி தான் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் திராவிடர் கழகத்தினுடைய தலைவர் ஆசிரியருக்கு வீரமணியைப் பாராட்டுகிற அந்த நிகழ்ச்சியில் இரண்டு பேரும் ஒரே கருத்தை பேசினோம் என்றார் தொல்.திருமாவளவன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்

EZHILARASAN D

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று: அமைச்சர் பொன்முடி

EZHILARASAN D

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் – பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Dinesh A