பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30, வெளியாகவுள்ள நிலையில், நானே வருவேன் திரைப்படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வ ராகவனால் இயக்கப்பட்டுள்ளது.வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் தவிர, இந்துஜா, எல்லி அவ்ரம்பிரபு, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நானே வருவேன் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் தனது சகோதரர் செல்வ ராகவனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் என்பத்தலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவனும் எரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இருவரும் துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது நானே வருவேன் படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்திற்குத் தனிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது.
இத்திரைப்படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதவுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30, அன்று திரையரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நானே வருவேன் திரைப்படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.









