இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரை மாய்த்துக் கொண்டு இறைந்த தனது காதலன் அலெக்சாண்டர் உர்துலா வழக்கில் தனக்கும் பங்குள்ளதாக ஒப்புக்கொண்ட காதலி யூ தனக்குரிய தண்டனையை ஏற்றார்.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி இன்யங் யூவும், முன்னாள் மாணவர் அலெக்சாண்டர் உர்துலாவும் 18 மாதங்களாக காதலித்து வந்தனர். இருவறுக்கிடையே இருந்த இந்த காதல் வாழ்கை சுமூகமானதாக அமையவில்லை. எனவே தொடர் சண்டைகளால் மணமுடைந்த உர்துலா, மே மாதம் 2019 இல் தனது பட்டப்படிப்பு விழாவின் சில மணிநேரங்களுக்கு முன்பு பார்க்கிங் கேரேஜில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு இறந்தார்.
உர்துலாவின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டைகளின் போது, யூ அனுப்பி இருந்த ஏராளமான குறுஞ்செய்திகள் உர்துலாவை உயிரிழப்புக்கு தூண்டும் வகையில் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், பாஸ்டனில் உள்ள சஃபோல்க் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட யூவின் தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்யுமாறு கேட்டிருந்தார். இதையடுத்து மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரியில் நடக்கவிருந்தது. அதற்கு முன்பே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், தற்போது யூவிற்கு சஸ்பெண்டெட் செண்டன்சில் இரண்டரை வருட சிறைத்தண்டனையும் 10 வருட நன்னடத்தை தண்டனையும் வழங்கப்பட்டது. (சஸ்பெண்டெட் செண்டன்ஸ் என்பது 300 மணிநேர சமூக சேவையை முடித்தல், மற்றும் மனநல சிகிச்சையைத் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற விதிமுறைகளை ஏற்று நடந்தால், சிறை தண்டனை நேரத்தைத் தவிர்க்கலாம்). இதையடுத்து, தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு இந்த சஸ்பெண்டெட் செண்டென்ஸ் தண்டனையை ஏற்றார் யூ.
இந்த வழக்கு இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையும் எனவும், ஒருவரை இழிவுபடுத்துவது,உயிரை மாய்த்துக் தூண்டுவது கூட, பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார் நீதிபதி.








