சென்னையில், பெரியார் பிறந்த நாள், நினைவு நாள் என்றால், சிம்சன் பெரியார் சிலைக்கு கீழ் உள்ள பெரியார் படதிற்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்வது வழக்கம். அப்படி, வைக்கப்படும் பெரியாரின் படம் இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.
பெரியார் என்றதும் நம் நினைவுக்கு வருவது கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமூக நீதி என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல, பெரியார் புகைப்படம் என்றதும் நம் நினைவுக்கு வருவதும், சில குறிப்பிட்ட புகப்படங்களாக மட்டுமே இருக்கும்.

பெரியார் பிறந்த நாள், நினைவு நாள் என்றால் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் “பெரியார்” படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். அதிலும், சென்னை சிம்சனில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்படும் படத்திற்கு மலர் தூவி அவரின் போராட்டத்தை நினைவுகூர்வது, வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், வழக்கமாக வைக்கப்படும் அடர் கருப்பு நிற பின்பக்க தோற்றத்தில், கருப்பு சட்டையுடன் கம்பீரமாக இருக்கும் அந்த புகைப்படமும் இல்லாமல், பொன்நிற சால்வையில் பார்பவரை கவரும் வகையில் உள்ள அந்த புகைப்படமும் இல்லாமல், நீல நிற பின்பக்க தோற்றத்தில் கருப்பு சட்டையுடன் சிரித்த முகத்தோற்றத்தில், பார்த்ததும் கவரும் வகையில் வைக்கப்படுள்ள பெரியாரின் புகைப்படம் தற்போது, பார்ப்போர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்று, சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த, படத்திற்கு மலர் தூவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் அந்த படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று – திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்! pic.twitter.com/GFkH7v9mJK
— M.K.Stalin (@mkstalin) December 24, 2021
அதில், “ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் விடுதலைக்கான வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று – திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.







