நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, மாநிலங்களவை உறுப்பினரான எம். எம். அப்துல்லா, அவரின் செயல்பாடுகள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக வெளிநாடு வாழ் தமிழர் நல அணி இணைச் செயலாளரான எம்.எம்.அப்துல்லா சில மாதங்களுக்கு முன்பு புதிதாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமார் 20 அமர்வுகள் கொண்டிருந்தது. கூட்டத்தொடர் நிறைவுபெற்றதையடுத்து எம்.எம்.அப்துல்லா தனது செயல்பாடுகள் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றோடு முடிந்தது.100% வருகைப் பதிவு செய்துள்ளேன்.
6 விவாதங்களில் கலந்து கொண்டதோடு பல்வேறு துறைகளுக்கான 20 கேள்விகளும் எழுப்பியுள்ளேன்.
புதியவன் என்பதால் தனிநபர் தீர்மானத்திற்கு வாய்ப்பு கிட்டவில்லை. 1/2 pic.twitter.com/hftduSO77e
— Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) December 22, 2021
அதில், அவர் 100% வருகைப் பதிவு செய்துள்ளதாகவும் 6 விவாதங்களில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளுக்கான 20 கேள்விகள் எழுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் புதியவர் என்பதால் தனிநபர் தீர்மானத்திற்கு வாய்ப்பு கிட்டவில்லை எனவும் சராசரியை விட இரு மடங்கு அதிகமாக செயல்புரிந்ததாகவும் தெரிவித்தார்.







