அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது, மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் மர்ம நபர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் பெருமாள் அந்த நபரிடம் டிக்கெட் எடுக்க சொல்லியுள்ளார். அப்போது, மது போதையில் இருந்த அந்த மர்ம நபர் நடத்துனரிடம் டிக்கெட் எடுக்க முடியாது எனச் சொல்லியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை’
அப்போது, அந்த மர்ம நபர் தாக்கியதில் நடத்துனர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் பகுதியில் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். அதனைத்தொடர்ந்து, காயம் அடைந்த நடத்துனர் பெருமாளை மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர் சக பயணிகள்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த மதுராந்தகம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தப்பி ஓடிய நபர் சூனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: