முக்கியச் செய்திகள் தமிழகம்

பானி பூரி விற்கிறார்கள் என ஏன் கூறினேன்? அமைச்சர் விளக்கம்

பெரும்பாலானவர்கள் பானி பூரி கடைகளில் வேலை செய்வதாக தான் கூறினேன் அதில் உள் அர்த்தம் எதுவும் கிடையாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, எந்த மொழியையும் கற்கத் தயாராக இருக்கிறோம். சர்வதேச மொழியான ஆங்கிலமும் தாய் மொழியான தமிழ் மொழியும் எங்களிடம் இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

இந்தி தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என அமைச்சர் தெரிவித்த கருத்து குறித்து விவாதங்கள் எழுந்தன. பானி பூரி வியாபாரம் செய்வது தவறா என்ற ரீதியில் எதிர்வினைகள் எழத்தொடங்கின.இந்த நிலையில் கோவை விழாவை முடித்து விட்டு சென்னை திரும்பிய அமைச்சர் பொன்முடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ளவர்கள் வட மாநிலத்திற்கு சென்று வேலை செய்கின்றனர். அவர்களும் தமிழகத்திற்கு வந்து வேலை செய்கின்றனர்.

அங்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தான் இங்கு வேலைக்கு வந்துள்ளார்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன். வட மாநிலத்தில் வந்தவர்கள் பெரும் பாலானவர்கள் பனிப் பூரி கடைகளில் பணியாற்றுகின்றனர் என்றேன். அதில் உள் அர்த்தம் எதுவும் கிடையாது எனக் கூறி விட்டுச் சென்றார்.

Advertisement:
SHARE

Related posts

அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Arivazhagan CM

கொரோனா பாதிப்புகளை ஆராய கேரளா விரைகிறது மத்தியக் குழு

Jeba Arul Robinson

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு

Arivazhagan CM