விடுதியில் நடந்த ராகிங் கொடுமை..! 8 மாணவர்கள் இடைநீக்கம்

சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து, போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா…

சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து, போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 8000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர் தங்கிப் பயிலும் மாணவர்கள் விடுதியில் அடிக்கடி கல்லூரி மாணவர்களுக்குள் ராகிங் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி
வருவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று அக்கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் செய்யச் சொன்ன பணியை, ஜூனியர் மாணவர்கள் செய்யாததால், சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்தது மட்டுமின்றி போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடிப்பது , இரும்பு ரேக்கில் காலை தூக்கி தொங்க விட்டு சாரி சார் என்று சொல்லும் வரை தொங்க வைப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளனர். மேலும், காலை 5 மணிக்கு 5 நிமிடம் லேட்டாக எழுந்ததால் வணக்கம் சொல்லவில்லை என கூறி மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர், இரண்டாம் ஆண்டு மாணவர் மூலம், ஜூனியர் மாணவர்களுக்கு சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி உள்ளனர். தற்போது, அரசு மாணவர் விடுதியில் அரங்கேற்றப்பட்ட இந்த ராகிங் சண்டை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து எஸ்.சி விடுதி வார்டன் ரவி அவர்களிடம் கேட்டபோது 70 மாணவர்கள் தங்கி பயின்று வரும் விடுதியில் தற்போது 19 முதலாம் ஆண்டு மாணவர்கள், 1 இரண்டாம் ஆண்டு மாணவர்கள்,8 மூன்றாமாண்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சொல்வதைத்தான் மற்ற இரண்டாண்டு மாணவர்கள் கேட்க வேண்டும். விடுதி வார்டனை மதிக்க மாட்டார்கள், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்துள்ளேன் நடவடிக்கை எடுக்க வில்லைஎன்று கூறினார்.

இதுகுறித்த தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் கலைவாணி, மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களின் செயலை பெற்றோர்களுக்கு தெரிவித்து, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் மூலம் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இதுபோன்ற மாணவர்களின் ராகிங் சண்டை அடிக்கடி நிகழ்ந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ராகிங்கில் ஈடுபட்ட 8 சீனியர் மாணவர்களை கல்லூரி முதல்வர் தற்காலிக இடைநீக்கம் செய்ததோடு, அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.