திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுர பணிக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 137 அடி உயர ராஜகோபுர பணிக்கான பாலாலயம் நடைபெற்று, பந்தக்கால் நடப்பட்டது. இதில் அமைச்சர்கள், சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். உலகப்புகழ் பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய கோயிலில்…

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 137 அடி உயர ராஜகோபுர பணிக்கான பாலாலயம் நடைபெற்று, பந்தக்கால் நடப்பட்டது. இதில் அமைச்சர்கள், சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

உலகப்புகழ் பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய கோயிலில் ரூ. 300 கோடி மதிப்பில் வளாகப் பணி நடைபெற்று வருகிறது. இதில் போபுர திருப்பணி, கோவில் வெளிப்பிரகார பணி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு பணிகள் இடம்பெறுகின்றன. கிழக்கு மற்றும் சால கோபுர திருப்பணிக்கான பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பாலாலயம் நடைபெற்றது.

இன்று ராஜகோபுரம் திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றது. இதனால் இன்று அதிகாலை கோயிலில் 3 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகமும் நடைபெற்று பாலாலயம் தொடங்கியது. மேலும் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மகா மண்டபத்தில் 7.30 மணிக்கு கலச பூஜை, கர்ஹரி பூஜை, சங்கு பூஜை நடைபெற்றது. மேலும் ராஜகோபுர திருப்பணிக்கான பந்தக்கால் நடப்பட்டது.

பின்னர் விமான தளத்திலிருந்து மண்டபத்திற்கு ஆவாகனம் செய்து கும்பங்கள் எடுத்துவரப்பட்டது. வைக்கப்பட்ட கும்பத்திற்கு சிறப்பு பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.