சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது.
சென்னை அடுத்த பல்லாவரம் அடுத்து உள்ள நாகல்கேணி ஈஸ்வரி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேசன் (56). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த இவர் பம்மல் நகர திமுக 21 வது வட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்தநிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள கடை ஒன்றில் அமர்ந்திருந்த அவரை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி பம்மல் முன்னாள் நகரமன்ற தலைவர் வே.கருணாநிதி உட்பட ஏராளமான திமுகவினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு போட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.







