“வாக்கு திருட்டினாலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

தேர்தலில் வாக்கு திருட்டினாலேயே பா.ஜ.க வெற்றி பெறுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் ‘தேர்தல் திருட்டு’ என்ற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வாக்குத் திருட்டின் மூலம் சில நேரங்களில் தொகுதிகள் திருடப்படுகின்றன, சில நேரங்களில் முழு அரசாங்கமே திருடப்படுகிறது. பாஜகவின் 240 எம்.பி-க்களில் சுமார் 6-ல் ஒரு பங்கு எம்.பி-க்கள் வாக்குத் திருட்டின் மூலமே வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை பாஜக பாணியில் ‘ஊடுருவல்காரர்கள்’ என்று அழைக்கலாமா?

ஹரியானா மாநில அரசை “ஊடுருவல் அரசு” என விமர்சித்துள்ள அவர், தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் அரசின் பிடியில் இருப்பதாகவும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் செயல்முறைகள் சிதைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் விசாரணை அமைப்புகள் மத்திய அரசின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. அரசுக்கு உண்மையான பயம் நேர்மையான தேர்தல்கள் மீதுதான் உள்ளது. ஒருவேளை முறையான, நேர்மையான தேர்தல் நடந்தால், இன்று பாஜகவால் 140 இடங்களைக் கூட தாண்ட முடியாது என அவர் சவால் விடுத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.