தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக திகழ்கிறது. இந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டு உள்ளார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு மெயில் மூலமாக கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று பிற்பகலில் சென்னை வர உள்ளார். சென்னை வரும் ஆளுநர் அர்லேகர் தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று மாலை விஜய் ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







