பாஜக தனிமனித கட்சி அல்ல என்றும் பாஜகவின் சித்தாந்தம் மற்றும் திட்டங்களைக் ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்ப்போம் என்றும் அந்தக் கட்சியின் தலைவராக நியமிக் கப்பட்டுள்ள, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, கோவையில் இருந்து இன்று சென்னை வருகிறார். இன்றும் நாளையும் வழியெங்கும் உள்ள மாவட்டங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க, பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டுப் பயணத்தைத் தொடங்கிய அண்ணாமலைக்கு, வ.உ.சி மைதானம் அருகே, பாஜகவினர் மேளதாளம் முழங்க, உற்சாக வரவேற்பளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜக ஒரு தனிமனித கட்சி கிடையாது. தலைவர் என்ற பொறுப்பு, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதாகும். நிச்சயமாக பாஜகவை வளர்க்கவும், வலுபடுத்தவும் வேண்டும். பாஜக சார்பில் தமிழ்நாட்டில் இருந்து அதிக எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு.
பாஜகவின் சித்தாந்தம் மற்றும் திட்டங்களை ஒவ்வொரு மக்களுக்கும் கொண்டு சேர்ப்போம். கட்சியில் பல சீனியர்கள் இருந்தாலும் அனைத்து தலைவர்களையும் அரவணைத்து செல்வேன். திமுகவை எதிர்க்க, பாஜகவின் கொள்கைகளை எடுத்துச் சொன்னால் போதும். பாஜக சார்பில் சட்டமன்றத்தில் நான்கு உறுப்பினர்கள் இருந்தாலும் கூட, திமுக பேசுகின்ற அனைத்து அரசியலும் எங்களைக் சார்ந்துதான் இருக்கிறது. அதைக் எதிர்க்கும் எங்களின் அரசியலையும் பார்ப்பீர்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.