சேலத்தில் அரசுப் பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன.
சேலம் அருகே மல்லூர் ஏர்வாடியை சேர்ந்த முதியவர் கோவிந்தராஜ். இவர் சேலம் தனியார் மருத்துவமனையில் பிறந்த உறவினரின் குழந்தையை காண இரு சக்கர வாகனத்தில் சேலம், ஐந்து ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அவர் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவிந்தராஜ் அரசுப் பேருந்தில் சிக்கிய காட்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.








