’40 ஊசி போடச் சொன்னாலும் போடுவேன்’: முதலமைச்சரை சந்தித்த பின் வடிவேலு பேட்டி

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொற்காலமான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று பிரபல நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். பிரபல காமெடி நடிகர் வடிவேலு, தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். கொரோனா நிவாரண நிதிக்கு…

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொற்காலமான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று பிரபல நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் வடிவேலு, தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர் கூறியதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது சந்தோசமாக இருந்தது. மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தேன். எளிமையாக, குடும்பத்தில் ஓர் ஆள் மாதிரி பேசினார். முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 5 லட்சம் ரூபாயை அளித்துள்ளேன்.  உலகமே உற்றுநோக்கும் விதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறார். அவர் அப்படி செயல்படுவது, மெய்சிலிர்க்க வைக் கிறது.

‘உங்களை கெஞ்சி கேட்கிறேன், தடுப்பூசி போடுங்க, ஒத்துழைப்பு கொடுங்க’ என்று கேட்டு ஸ்டாலின் மக்களை தன்வசப்படுத்தினார். . பெண்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள். பொற்காலமான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். சிலர் முகக் கவசம் அணியாமல் இருக்கிறார்கள். நான் 2 தடுப்பூசிப் போட்டுள்ளேன். நாற்பது ஊசி போடச் சொன்னாலும் போடுவேன்.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

அவரிடம், அதிக படங்களில் மீண்டும் உங்களை பார்க்கலாமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’நல்லதே நடக்கும்’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.