தமிழகம் செய்திகள் வாகனம்

சிவகங்கை: நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்- இருவர் பலி!

சிவகங்கை அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் ஒக்கூரில் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நாலுகோட்டை
கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும்
ராஜேந்திரனின் இரு சக்கர வாகனத்தில் கடையிலிருந்து தஞ்சாவூர் மானாமதுரை தேசிய
நெடுஞ்சாலைக்கு வந்துள்ளனர்.

அச்சமயம் காரைக்குடியிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த அபிஷேக் என்பவர் இயக்கிவந்த இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேரும் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் அனுப்பிவைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் மற்றும் ராஜ்குமார் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த அபிஷேக்கிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்

EZHILARASAN D

‘பாஜக ஆதரவுக்காக கமலாலயத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் காத்துக்கிடக்கிறார்கள்’ – அமைச்சர் உதயநிதி விமர்சனம்

G SaravanaKumar

மறைமுகத் தேர்தல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

Halley Karthik