முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்

‘சூரரை போற்று’ படத்தை இந்தியில் ரீமேக்கிற்கு, நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன் மென்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பை வெளி யிட்டது.

இந்தப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் , இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தி ரீமேக் பணிகளுக்கு தடை விதிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது. விசாரித்த நீதிபதி, இந்தி ரீமேக்கிற்கான தடையை நீக்கி உத்தரவிட்டார்..

‘சூரரை போற்று’ படத்தை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா, இந்தியிலும் இயக்குகிறார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபுன்டான்டாயா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து, இப்படத்திற்கான பணிகளை விரைவில் தொடங்குகிறது.

Advertisement:
SHARE

Related posts

கருணாநிதி கொண்டுவந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களும் சட்டங்களும்

Gayathri Venkatesan

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்தின் சிறப்பம்சங்கள்..

Ezhilarasan

தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

Saravana Kumar