முக்கியச் செய்திகள் சினிமா

10 பிரபலங்கள் வெளியிடும் “அருண் விஜய் 33” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அருண் விஜய் 33 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 10 திரைப்பிரபலங்கள் வெளியிட உள்ளனர். 

அருண் விஜய் முதல்முறையாக இயக்குநர் ஹரியுடன் ”அருண் விஜய் 33” படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்தது. இதை இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யா, வேதிகா ஐஸ்வர்யா ராஜேஸ், விக்ரம் பிரபு, சாந்தனு, அதர்வா, சிபிராஜ் உள்ளிட்டோர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

புதுவை சட்டப்பேரவையில் தமிழில் ஒலித்த ஆளுநர் உரை

Halley karthi

பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

Gayathri Venkatesan

ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’

Ezhilarasan