முக்கியச் செய்திகள் தமிழகம்

’எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர் புலமைப்பித்தன்’: மு.க.ஸ்டாலின், வைகோ இரங்கல்

புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள் ளனர்.

அ.தி.மு.க முன்னாள் அவைத் தலைவரும் பிரபல பாடலாசிரியருமான புலவர் புலமைப் பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பல்வேறு ஹிட் பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர் புலவர் புலமைபித்தன். அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புலமைப்பித்தனின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன்
உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர்,
எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர். அவர் சட்ட மேலவை துணைத்
தலைவராகப் பணியாற்றியவர் என்பதும் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும்
கொண்ட புலவர் புலமைப் பித்தன், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு,
பெரிதும் வருந்துகிறேன். கொங்கு மண்டலத்தில் பள்ளம்பாளையம் எனும் கிராமத்தில்
6.10.1935 அன்று பிறந்த புலமைப்பித்தன், 85 வயதில் மறைந்த காலம் வரை
தமிழுக்காகவும், தமிழ் இன மேம்பாட்டுக்காவும் அயராது உழைத்த பெருமகன் ஆவார்.

அ.இ.அ.தி.மு.க.வின் அவைத் தலைவரார், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை துணைத் தலைவர், தமிழ்நாடு அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய புலமைப் பித்தனுக்கு, தமிழ்நாடு அரசு 2001 ஆம் ஆண்டு பெரியார் விருது அளித்துப்
பாராட்டியது.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பலவற்றிற்கு திரைப்படப் பாடல்கள் எழுதி பெருமை சேர்த்த வர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் பரப்புரை பணிகளுக்கு உயிரோட்டமான பாடல்கள் எழுதிக் கொடுத்து உணர்வு ஊட்டினார்.

தமிழ்நாடு அரசு நான்கு முறை சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதினை அளித்து புலமைப் பித்தனுக்குப் பெருமை சேர்த்தது. தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரனும், பேபி சுப்ரமணியம் உள்ளிட்ட புலிப் படைத் தளபதிகளும், விடுதலைப் புலிகளும் அவரது வீட்டில் தங்கி, தமிழ் ஈழ விடுதலைக்கான பணிகளில் ஈடுபட்டார்கள். இரண்டாம் தாயகம் என்றே அவரது இல்லத்தை, புலிகள் அழைத்தார்கள். இறுதிக் காலத்தில் உடல்நலம் குன்றி மருத்து வமனையில் நோயுடன் போராடி, அந்த மாவீரன் தன் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.

அவரது தமிழ்ப் பணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வீர வணக்கத்தையும், அவரது உறவினர்களுக்கும், இயக்கத்தவர்களுக்கும் என் அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்

Advertisement:
SHARE

Related posts

ரொட்டியில் எச்சில் துப்பியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

Saravana Kumar

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

Vandhana

பிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு

Saravana Kumar