எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க.ஸ்டாலினின் தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




