காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60வது கூட்டம் நாளை கூடுகிறது!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் வரும் 23ஆம் தேதி (நாளை) டெல்லியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிருவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் வரும் 23ஆம் தேதி (நாளை) டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெறும். மேலும் கர்நாடகாவில் ஹேரங்கி அணையில் நீர் தேக்குவது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாகவும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மற்றும் பற்றாக்குறை நீர் தொடர்பாக தமிழகவும் அதிகாரிகள் இந்த கூட்டத்தின் போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த உள்ளனர். கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.