பட்டாசு ஆலை வெடிவிபத்து – முதல்வர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

வேலூர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்தார்.

தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “வேலுார் மாவட்டம். அணைக்கட்டு கிராமத்தில் நேற்று (21.10.2026) தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியிலிருந்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து அணைக்கட்டு அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.